செவ்வாய், 22 செப்டம்பர், 2015

அமிதாப் - ரஜினி - ட்விட்டர் யுத்தம்

அமிதாப்பின் ட்விட்டர் ஃபாலோயர்ஸ் 1 கோடியே எழுபது இலட்சம் பேர். ஆனால் ரஜினியின் ஃபாலோயர்ஸ் வெறும் 23 இலட்சம் பேர் என்றும் அமிதாப்பின் எண்ணிக்கையை ரஜினியால் தொடக் கூட முடியாது என்றும் ஒரு மின் பத்திரிகை கட்டுரை எழுதியிருக்கிறது. "அட வெண்ணைகளா, யாரை யார் கூட, எதுக்கு கம்பேர் பண்றதுன்னு கூடத்தெரியலைன்னா நீங்கள் - லாம் எதுக்கு எழுத வர்றீங்க?" என்றுதான் எனக்குத் தோன்றியது
.
இந்தியா முழுக்கப் பரவியுள்ள ஹிந்தி சினிமாவில் நடிக்கும் ஒரு நபரின் ஃபாலோயர்ஸையும், மாநில மொழிகளில் ஒன்றான தமிழில் மட்டுமே நடித்து இந்தியா முழுவதும் ஃபேமஸ் ஆகியிருக்கும் ஒருவரையும் ஒப்பிடுவது சரியா? அப்படிச் செய்வதென்றால் தெலுங்கில் மட்டும் நடிக்கும் சிரஞ்சீவி, மலையாளத்தில் மட்டும் நடிக்கும் மோகன்லால், கன்னடத்தில் மட்டும் நடித்த ராஜ்குமார் இப்படி யார் கணக்கையாவது எடுத்து ஒப்பிட்டுப் பாருங்கள்
.
அப்படிப் பார்த்தால் 30 மாநிலங்கள் என்று கணக்கு வைத்து அமிதாப் ஃபாலேயார்ஸ் எண்ணிக்கையை வகுத்தால் ஒரு மாநிலம் அதாவது தமிழ்நாடு கணக்குக்கு வெறும் 5 இலட்சத்து 66 ஆயிரம் ஃபாலோயர்ஸ் மட்டும் தானே கணக்கில் வருகிறது? அப்படிப் பார்த்தால் ரஜினி தான் அமிதாப்பை விட லீடிங்
வட இந்தியாவில் தெருவில் திண்பண்டம் விற்பவன் கூட இன்டர்நெட் வசதி உள்ள மொபைல் போன் வைத்திருப்பான். ட்விட்டர் அக்கவுண்ட் இருக்கும் வாய்ப்பு அதிகம். அமிதாப் ஃபாலோ செய்வான். ஆனால் தமிழ்நாட்டில் பல பேருக்கு, ஏன் பல ரஜினி ரசிகர்கள், அல்லது பெரிய வேலையில் உள்ளவர்கள், ஏன், பெரிய அரசு அலுவலர்களிடம் கூட ஸ்மார்ட் போன் இல்லை. அவர்களுக்கு இன்னும் பழகவில்லை. ட்விட்டர்னா ஸ்கூட்டரா என்று கேட்கும் அளவுதான் அவர்களுக்கு நெட்-டறிவு. இதிலே ரஜினிக்கு ஃபாலோயர்ஸ் இல்லை, கம்மி என்று அடித்து விடுவதெல்லாம் காலக் கொடுமை.
 .
ட்விட்டர் அக்கவுண்ட் இருக்கும் என்பது மட்டும் என் அதீத கற்பனையாக இருக்கலாம். ஆனால் ஸ்மார்ட் போன் எண்ணிக்கை அளவு அங்கே மிகவும் அதிகம். இங்கே கூட (கோவை மற்றும் மற்ற ஊர்கள்) பிழைப்புக்காக வந்திருக்கும் வட இந்திய இளைஞர்கள் ஸ்மார்ட்போன்களை நிறைய உபயோகிக்கிறார்கள். இவர்களுக்காகவே செகண்ட் ஹாண்ட் செட்டுகள் நிறையக் கை மாறுகின்றன. இரண்டாயிரத்தில் இருந்தே கிடைப்பதால் உபயோகிப்பாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. மூன்று மாதத்திற்கு ஒருமுறை போன் மாற்றுகிறேன் என்று ஒரு இளைஞன் சொன்னான். அதே அங்கு. நினைத்த போது வாங்கலாம். மாற்றலாம்
 .
என் மாமியார் ஊர் மும்பை. அங்கே செல்லும் போது நிறைய கவனித்திருக்கிறேன். ஒருத்தர் விடாமல் அனைவர் கையிலும் ஸ்மார்ட் போன் பார்த்திருக்கிறேன். மூன்றாண்டுகளுக்கு முன் ஒரு பெரும் விளம்பரத்துடன் ஸாம்ஸங் காலக்ஸி எஸ் த்ரீ ரிலீஸ் ஆகி மூன்றாவது நாள், நான் சாலையில் கடந்து போன பத்தில் ஒருவர் கையில் அது இருந்ததைப் பார்த்து ஆச்சரியத்தில் வியந்திருக்கிறேன். மனைவியிடம் கேட்டால், இங்கே இதெல்லாம் ஸ்டேட்டஸ் சிம்பள். நானும் வச்சிருக்கேன் என்பது தான் அவர்கள் எண்ணம்
 .
இன்னோரு முக்கிய விஷயம் விலைவாசி மற்றும் காஸ்ட் ஆஃப் லிவிங். நம்ம ஊர் அரிசி பருப்பு, வண்டி, போன் விலைகள் போன்றவை இங்கேயும் அங்கேயும் ஒன்றா
 .
பள்ளி ஆசிரியைகள் தம் ஸ்மார்ட் போனிலேயே அட்டென்டென்ஸ் மார்க் செய்யும் விதத்தில் ஆன்டிராய்டு அப்ளிகேஷனை வெளியிட்ட என் முந்தைய கம்பெனியின் சிஇஓ இங்கே வந்தபோது இங்கே உள்ள பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியைகள் பலர் சாதாரண போன் கூட உபயோகிக்காததைப் பார்த்து வியந்தார். in north india, even a rikshawala has a smartphone yar என்றார். இங்கே போன் கூட உபயோகிக்காதவர்கள், எப்போ ஸ்மார்ட் போன் வாங்கி, எப்போ நெட் போட்டுப் பழகி, எப்போ நம்ம புராடக்டை அறிமுகப்படுத்துறது? என்று சலித்துக் கொண்டார்
 .
அவரிடம் நான் - "சார், இங்கே டவுன் தாண்டிய பள்ளிகளில் ஆசிரியைகள் வாங்கும் ஆரம்பச் சம்பளமே 3000, 4000 தான். ஆணாதிக்கக் குடும்பச் சூழ்நிலை போன்றவை காரணமாக அவர்கள் ஸ்மார்ட்போனை நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஆனால் நார்த் இல் விலை வாசி அதிகம் என்பதால் அவர்கள் ஆரம்பச் சம்பளமே 10000, 12000 மாவது இருக்கும். வீட்டு வாடகையே 10000 ல் ஆரம்பிக்கும் பெருநகரங்களில் அதுவே குறைவு தான். ஆனால் ஒரு ஸ்மார்ட் போனின் விலையோ வடவர்களுக்கும், தென்னவர்களுக்கும் ஒன்றுதான். இது அபத்தம் இல்லையா? அவர்கள் ஒரு போனை ஈஸியாக வாங்கி விட முடியும். இங்கே அந்த பெண் ஆசிரியருக்கு சம்பளத்தில் இருந்து 500 ரூபாய் பாக்கெட் மணியாகக் கிடைத்தாலே அதிகம்" என்றேன். "சரிதான்" என்று ஒப்புக் கொண்டார்
 .
ஆறு வருடங்கள் முன்பு தமிழ்நாட்டில் 14 ரூபாய் விலையுள்ள 300 மில்லி பெப்ஸி டின் ஒன்றை குர்காவன் மால் ஒன்றில் 45 ரூபாய் என்று பார்த்து அதிர்ந்தேன். அந்த அளவு விலைவாசியுள்ள ஊரில் உள்ளவனுக்கு அதற்குத் தகுந்தாற்போல் சம்பளம் வாங்க வேண்டுமல்லவா? அவனைப் போய் நம்முடன் ஒப்பிட்டால் எப்படி
 .
இதே உதாரணம் தான் ஸ்டாக் மார்க்கெட்டில் ஷேர்களின் விலைக்கும். இங்கே என் திறமைக்கும் வயதுக்கும் வருடச் சம்பளமாக அதிக பட்சம் 6 இலட்சம் வாங்க முடியும் என்றால், என்னைப் போன்ற என் நண்பர் ஒருவர் அங்கே குறைந்த பட்சமே 12 இலட்சம் வாங்குகிறார். காரணம் காஸ்ட் ஆஃப் லிவ்விங். அவருக்கு அந்த அளவுக்குச் செலவு இருக்கிறது. ஆனால் நான் ஸ்டாக்-களில் இன்வெஸ்ட் செய்ய விரும்பினால், உதா - சுஸ்லான் எனர்ஜி ஷேரின் விலை எனக்கும் ரூ.22 தான். என் நண்பருக்கும் அதே தான். ஆனால் அவரின் இன்வெஸ்ட்மெண்ட் அளவு பெரிதாகும். நான் போன் வாங்க நினைத்தால் எனக்கும் 64000 தான். அவருக்கும் அதே 64000 தான்
 .
இங்கே ஒரு அபார்ட்மெண்டின் விலை 30 இலட்சம், பெங்களூரில் 60 டு 70 இலட்சம். மும்பையில் 10 கோடியில் ஆரம்பிக்கிறது (இது பற்றிய என்.சொக்கன் அவர்களின் கட்டுரை ஒன்றைப் படித்தேன்) ஒரு பிளாட்டின் விலை. இது எதுவுமே தெரியாமல், எதைப்பற்றியும் யோசிக்காமல் இவ்வளவு முரண்பாடுகள் இருக்கும் போது மொட்டையாக ரஜினியையும், அமிதாப்பையும் கம்பேரிசன் செய்வது தான் கடுப்பளிக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக